- சாத்தான்குளம்
- சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி திருகல்யாண்
- சாத்தான்குளம் தெற்கு விவசாயிகள் சங்கம்
- லூர்துமணி
- சித்திராய்
- ஜஸ்டின் ஜெயராஜ்
- முத்துலிங்கம்
- தாசில்தார் ராஜேஸ்வரி
சாத்தான்குளம், ஜன. 6: சாத்தான்குளம் அருகே சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி முன்னாள் தலைவர் திருக்கல்யாணி தலைமையில் சாத்தான்குளம் தென்பகுதி விவசாயிகள் சங்க தலைவர் லூர்துமணி, கிராம மக்கள் சித்திரை, ஜஸ்டின் ஜெயராஜ், வழக்கறிஞர் முத்துலிங்கம் ஆகியோர் சாத்தான்குளம் தாசில்தார் ராஜேஸ்வரியை சந்தித்து மனு அளித்தனர். அதில், சாத்தான்குளம் அருகே சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி பொத்தகாலன் விளை அந்தோணியார் கோயில் தெரு பகுதியில் உள்ள சடையநேரி கால்வாய் ஓடையில் தனிநபர் ஒருவர் சட்டவிரோதமாக மணல்களை மாட்டுவண்டிகள் மூலம் கடத்தி வருகிறார். இந்த ஓடையில் மணல் அள்ளப்படுவதால் அப்பகுதியில் பள்ளம் தோன்றி, மழை வெள்ளம் மற்றும் ஓடையில் சடையநேரி கால்வாய் மூலம் தண்ணீர் வரும்போது ஊருக்குள் புகும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்தை பார்வையிட்டு மணல் அள்ளப்படுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர். இந்த மனுவை பெற்ற தாசில்தார், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
