கோவில்பட்டி, ஜன. 6: தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அரசு அறிவித்த தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (டிஏபிஎஸ்) அறிவிப்பை முன்னிட்டு முதலமைச்சருக்கு பல்வேறு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதன்படி கோவில்பட்டி கோட்டம், உட்கோட்டம் மற்றும் பிரிவு நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஊழியர்கள், சாலை ஆய்வாளர்கள், சாலைப்பணியாளர்கள் தங்களது அலுவலகத்தின் முன்பாக பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் இந்த அறிவிப்பிற்காக முதலமைச்சர் மற்றும் பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்தனர்.
