போடி, ஜன. 6: தேனி மாவட்டம் போடி நகர் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கீழத்தெருவில் பெட்டிக்கடை நடத்தி வரும் முனியாண்டி(44) என்பவர் சட்ட விரோதமாக கடையில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 5 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தார். இதேபோல, கீழத்தெருவில் பேச்சியம்மன் கோ யில் பகுதியில் தங்கப்பாண்டி(54) என்பவர் 5 மது பாட்டில்களை பது க்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர்.
