தஞ்சை: ‘திருப்பரங்குன்றத்தில் ஒருவருக்கொருவர் உறவினர்களாக சகோதரர்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். பொது அமைதி, மத நல்லிணக்கத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு அமைப்பையோ, கட்சியையோ அமமுக ஏற்காது. மதம், ஜாதி, கடவுள் பெயரில் பிரிவினை ஏற்படுத்தும் அரசியல் தமிழ்நாட்டில் எக்காலத்திலும் எடுபடாது’ என தஞ்சையில் நடைபெற்று வரும் அமமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ‘100 நாள் வேலை திட்டத்தை மகாத்மா காந்தி பெயரிலேயே செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுத்தக் கூடாது. மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டும்’ எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
