- அஇஅதிமுக
- தவேகா
- சேலம்
- முன்னாள் அமைச்சர்
- செங்கோட்டையன்
- விஜய்
- சட்டமன்ற உறுப்பினர்
- சேலம் ஓமலூர்
- பால்பாக்கி கிருஷ்ணன்
- சென்னகிருஷ்ணன்
- பொதுச்செயலர்
- சேலம் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம்
சேலம்: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நடிகர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். இதையடுத்து, சேலம் ஓமலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பல்பாக்கி கிருஷ்ணனை இணைத்தார். சேலம் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பொதுச்செயலாளராக இருந்தவர் சென்னகிருஷ்ணன். இவரது பதவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஓராண்டிற்கு முன்பு பறித்தார். இந்நிலையில் நேற்று காலை சென்னகிருஷ்ணன், தவெகவின் தலைமை நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அதேபோல அதிமுகவை சேர்ந்த வக்கீல் அருணாச்சலமும் இணைந்துள்ளார். சமீபத்தில் தவெகவில் இணைந்த அதிமுக மாஜி எம்எல்ஏ வெங்கடாசலம் உடனிருந்தார்.
