சென்னை: பழமையும் புதுமையும் சந்திக்கும் நகரான நமது சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக விக்டோரியா பொது அரங்கம் விளங்குவது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காலத்தை கடந்து மீண்டும் தொன்மை அழகுடன் விக்டோரியா பொது அரங்கம் என சென்னை மாநகராட்சியின் சமூக வலைதள பதிவை மேற்கோள்காட்டி முதல்வர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளர்.
பழமையும் புதுமையும் சந்திக்கும் நகரான நமது சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக விளங்குவது விக்டோரியா பொது அரங்கம்.
ஒரு நாள் அக்கட்டடத்தைக் கடந்திடும்போது, அதன் பழமையும் அழகியலும் மாறாமல் அதனை மீட்டுப் புதுப்பித்திட வேண்டும் என நினைத்தேன். அது நனவாகிவிட்டது!
சென்னையின் வரலாற்றில்… https://t.co/iFQCkomeNE
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) January 4, 2026
முதல்வரின் சமூக வலைதள பதிவில்:
பழமையும் புதுமையும் சந்திக்கும் நகரான நமது சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக விளங்குவது விக்டோரியா பொது அரங்கம். ஒரு நாள் அக்கட்டடத்தைக் கடந்திடும்போது, அதன் பழமையும் அழகியலும் மாறாமல் அதனை மீட்டுப் புதுப்பித்திட வேண்டும் என நினைத்தேன். அது நனவாகிவிட்டது.
சென்னையின் வரலாற்றில் ஆர்வம் கொண்டோர், விக்டோரியா பொது அரங்கத்தில் அதனைக் காணலாம் என பதிவிட்டுள்ளார்.
