சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை மொபைல் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக தேர்தல் அறிக்கை குழுவின் செயலி, வாட்ஸ்ஆப் எண், சமூக வலைதளங்களை அறிமுகம் செய்து வைத்தார். ஆலோசனைகளை தெரிவிக்க 08069446900 என்ற எண்களிலும் dmkmanifesto2026@dmk.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் http://www.dmk.in/ta/manifesto2026 என்ற வலை தளங்களில் தொடர்பு கொள்ளலாம்.
