கோவை, ஜன. 3: கோவை காந்திபுரத்தில் இருந்து சரவணம்பட்டி விசுவாசபுரத்திற்கு நேற்று தனியார் பஸ் புறப்பட்டது. பஸ்சில் அத்திப்பாளையத்தை சேர்ந்த மேரி(35) என்ற பெண் பயணம் செய்தார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் மேரி பஸ்சுக்குள்ளே மயங்கி சரிந்தார். இதனைப்பார்த்து சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே பஸ் டிரைவர் மணிகண்டன், கண்டக்டர் தினேஷ் ஆகியோர் மேரியை மீட்டு அதே பஸ்சில் அழைத்து சென்று அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதால் அந்த பெண் சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளார். டிரைவர், கண்டக்டரின் இந்த மனித நேய செயலுக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.
