×

கோடியக்காடு வனவிலங்கு சரணாலயத்தில் அனுமதியின்றி மரங்களை வெட்டியவர்கள் மீது புகார்

வேதாரண்யம், ஜன.3: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வன சரணாலயத்தில் உள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி வனத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி வனத்துறைக்கு அனுப்பி உள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயம் 2,250 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இச் சரணாலயத்தில் வெளிமான், புள்ளிமான், முயல், உடும்பு, நரி என வனவிலங்குகள் உள்ளது. இச் சரணாலயத்தில் உள்ள மயில் கொன்றை, பலா, ஒதி ஆகிய மரங்களை தன்னுடைய இடத்தில் உள்ளது என தனிநபர் வெட்டியதாகவும், உடனடியாக மரங்களை வெட்டியவர் மீது உரிய குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

வெட்டப்பட்ட மரங்கள் இருந்த இடத்தில் மீண்டும் மரங்களை நடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோடியக்காடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தமிழ்மணி புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

 

Tags : Kodiyakadu Wildlife Sanctuary ,Vedaranyam ,Kodiyakadu Forest Sanctuary ,Nagapattinam ,Kodiyakadu Panchayat ,President ,Tamilmani ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை