மார்த்தாண்டம், ஜன.3: குழித்துறை அருகே மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் மாதவன் மகன் விஜயராஜ்(72) கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது பைக்கில் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் ஓட்டி வந்த பைக்கை மருத்துவமனை வாயிலில் நிறுத்தியிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் பைக்கை திருடி சென்றுள்ளார். மருந்து வாங்கிவிட்டு வெளியே வந்து விஜயராஜ் பார்த்த போது பைக்கை காணவில்லை. அருகில் உள்ள இடங்களில் தேடியும் கிடைக்காததால் மார்த்தாண்டம் போலீசாரிடம் அவர் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை கண்காணித்து பைக்கை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
