புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கம் புதுகையில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜன. 24: புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து புதுக்கோட்டையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொமுச மாவட்ட தலைவர் ரத்தினம் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தை ஏஐடியூசி மாவட்ட தலைவர் தர்மராஜன் துவக்கி வைத்தார். சிஐடியூ மாவட்ட செயலாளர் தர் நிறைவு செய்து வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் எல்பிஎப் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ரத்தினம், போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகி வேலுச்சாமி உட்பட பலர் பங்கேற்று பேசினர். அப்போது புதிய வேளாண் சட்டங்கள் மூன்றையும் ரத்து செய்ய வேண்டும். புதிய மின் வரைவு மசோதாவை கைவிட வேண்டும். தொழிலாளர் சட்ட தொகுப்புகள் 4 ரத்து செய்ய வேண்டுமென கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: