×

க.பரமத்தி அருகே சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

க.பரமத்தி, டிச.31: க.பரமத்தி அருகே சட்டவிரோதமாக மது விற்றவரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் க.பரமத்தி காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது க.பரமத்தி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றுக் கொண்டிருந்த கரூர் மாவட்டம் புகலூர் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் நேதாஜி என்ற அன்பழகனை (48) க.பரமத்தி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.4300 மதிப்புள்ள 27 மது பாட்டில்களை க.பரமத்தி போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : K.Paramathi. ,K.Paramathi ,Karur district ,K.Paramathi Police ,Sub-Inspector ,Chandrasekaran ,
× RELATED குட்கா விற்பனை செய்தவர் மீதுவழக்கு