×

மதுரையில் பயங்கரம்; ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை

அவனியாபுரம், ஜன. 1: மதுரை, பெருங்குடியில் உள்ள விமான நிலைய சாலை அருகே, விருசமரத்து ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் மூக்கையாத்தேவர். இவரது மகன் முனீஸ் (26). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று இரவு அப்பகுதியில் தனது சகோதரியுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெருங்குடி பகுதியைச் சேர்ந்த நான்கு பேர், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை எடுத்து முனீஸை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் பரிதாபமாக பலியானார். தகலறிந்து வந்த அவனியாபுரம் போலீசாரிடம், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்திய முனீஸின் உறவினர்கள், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமரசத்தை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். வழக்கு பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Tags : Madurai ,Avaniyapuram ,Mookkaiyathevar ,Virusamarathu Uraani ,Perungudi, Madurai ,Munees ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்