×

கொங்கணாபுரத்தில் 8,100 பருத்தி மூட்டை ₹2.10 கோடிக்கு ஏலம்

இடைப்பாடி,  ஜன.24:  கொங்கணாபுரம் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் நேற்று, விவசாயிகள் கொண்டுவந்த 8,100 பருத்தி மூட்டைகள் ₹2.10 கோடிக்கு ஏலம் போனது. இடைப்பாடி அடுத்த கொங்கணாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை  உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளையில், நேற்று பருத்தி  ஏலம் நடந்தது. சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை  சேர்ந்த விவசாயிகள் 8,100 பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர்.  விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் பிடி ரகம்  பருத்தி குவிண்டால் ₹5,450 முதல் ₹6,769 வரையும், டிசிஎச் ரகம் பருத்தி  குவிண்டால் ₹7,200 முதல் ₹8,491 வரையுமாக மொத்தம் ₹2.10 கோடிக்கு ஏலம்  போனது என கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Konganapuram ,
× RELATED அரூரில் 2000 பருத்தி மூட்டை ₹42 லட்சத்திற்கு ஏலம்