×

குரூப் 2, 2ஏ பணிக்கான மெயின் தேர்வு தேர்வு கட்டணம் செலுத்த அவகாசம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிவிப்பு: வரும் பிப்ரவரி 8ம் தேதி முற்பகலில் குரூப் 2ஏ பணிகள், 8ம் தேதி பிற்பகலில் தமிழ் தகுதி தேர்வு மற்றும் 22ம் தேதி முற்பகல் குரூப் 2 பணிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது. ஆனால், இதுவரை 766 விண்ணப்பதாரர்கள் முதன்மை தேர்வு கட்டணம் செலுத்தவில்லை மற்றும் 113 மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் தங்கள் உரிய மாற்றுத்திறனாளி சான்றிதழை பதிவேற்றம் செய்யவில்லை. எனவே, அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு, ஓடிஆர் காலம் வரும் 2ம் தேதி பிற்பகல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் உரிய சான்றிதழை www.tnpsc.gov.inல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் காலவரம்பு நீட்டிக்கப்படாது.

Tags : TNPSC ,Chennai ,Shanmuga Sundaram ,
× RELATED ஏற்காடு காபி தோட்டத்திற்கு வரவழைத்து...