×

பஸ்களின் தகுதியை ஆய்வு செய்ய ஆணையம் கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: விபத்துகளை தடுக்க போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்த உத்தரவிடக் கோரி வளசரவாக்கத்தை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பேருந்துகள் தீப்பிடிக்காத தன்மையுடனும், தீயணைப்பு கருவிகளுடனும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விமானத்துறை, ரயில்வே துறையில் இருப்பது போல் பேருந்துகளின் தரத்தை ஆய்வு செய்ய தனி ஆணையத்தை அமைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், பி.தனபால் அமர்வு, மனுவுக்கு ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் தமிழக போக்குவரத்து துறை ஆணையர் உள்ளிட்டோர் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Tags : Court ,Chennai ,Devadas Gandhi Wilson ,Valasaravakkam ,Tamil Nadu ,
× RELATED ஏற்காடு காபி தோட்டத்திற்கு வரவழைத்து...