போபால்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாற்றாக ஜி ராம் ஜி திட்டம் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை மீறி நிறைவேற்றி சட்டமாக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றியது.
இது குறித்து ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறுகையில், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுக்கு எதிரானது. ஜனநாயகத்திற்கு விரோதமானது. மாநில சட்டங்களுக்கு எதிராக அனைத்து பஞ்சாயத்துகளில் தீர்மானம் நிறைவேற்றத் தொடங்கினால் சரியாக இருக்குமா? என்றார்.
