- அர்ஜுனா நதி
- விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு
- விருதுநகர்
- காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு
- விருதுநகர் மாவட்டம்
- விருதுநகர் ஒன்றியம் ஆர்.ஆர்.
- நகர்
விருதுநகர், டிச. 30: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அர்ஜூனா ஆற்றை தூர்வாரி சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர். விருதுநகர் ஒன்றியம் ஆர்ஆர்.நகரில் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் ராம்பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ராமமூர்த்தி, வச்சகாரப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக விருதுநகர் ஒன்றிய தலைவராக காளிமுத்து, செயலாளராக நாட்டாமை முருகேசன், பொருளாளராக பெரியசாமி, துணை தலைவர்களாக கண்ணாயிரம், ராசு, துணை செயலாளர்களாக சின்னச்சாமி, சீனிவாசன், மாவட்டத் துணைத் தலைவராக ராமச்சந்திரன், தங்கச்சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து கூட்டத்தில், அர்ஜூனா ஆற்றை தூர்வாரி, சீமைகருவேல் மரங்களை அகற்ற வேண்டும். காட்டு பன்றிகளால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
காட்டுப்பன்றிகளை ஒழிப்பதில் மாவட்ட நிர்வாகத்துடன், விவசாயிகளை இணைத்து செயல்பட வேண்டும். ஆர்ஆர். நகர் நான்கு வழிச்சாலை கிழக்கு பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். மதுரையில் பிப்ரவரி 11ல் நடைபெறும் தென் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை மாநாட்டிற்கு அனைத்து பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
