×

கூடக்கோவில் – விருதுநகர் இடையே அரசு டவுன் பஸ் சேவை தொடக்கம்: கிராம மக்கள் மகிழ்ச்சி

திருமங்கலம், டிச 30: தினகரன் செய்தி எதிரொலியாக, திடீரென நிறுத்தப்பட்ட கூடக்கோவில் – விருதுநகர் இடையிலான டவுன்பஸ் சேவை, மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. கள்ளிக்குடி அருகேயுள்ள கூடக்கோவிலில் இருந்து கொக்குளம், அரசபட்டி, சமத்துவபுரம், சிவரக்கோட்டை, கள்ளிக்குடி வழியாக விருதுநகர் வரை தடம் எண் 13 கேவி என்ற டவுன்பஸ் சேவை, கடந்த 8 மாதங்களுக்கு முன் துவக்கப்பட்டது. கூடக்கோவில், கொக்குளம், வலையங்குளம், கிருஷ்ணாபுரம், திருமால், புதூர், தூம்பகுளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கள்ளிக்குடி தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு செல்வதற்கும், மாணவ, மாணவிகளுக்கம் வசதியாக இந்த டவுன் பஸ் விருதுநகர் வரை இயக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இந்த டவுன் பஸ் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீரென நிறுத்தப்பட்டது. இந்த டவுன் பஸ் சேவையை மீண்டும் துவக்க வேண்டும் என கள்ளிக்குடி தாலுகா பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக தினகரனில் கடந்த 27ம் தேதி செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து அரசு போக்குவரத்துக்கழகம் நேற்று முதல் மீண்டும் கூடக்கோவில் – விருதுநகர் டவுன்பஸ் சேவையை துவக்கியது. தினகரன் செய்தி எதிரொலியாக மீண்டும் இயக்கப்படும் டவுன்பஸ் சேவையை, பயணிகள் வரவேற்றனர். தொடர்ந்து இந்த பஸ்சை நிறுத்தாமல் இந்த வழித்தடத்தில் இயக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Koodakovil ,Virudhunagar ,Thirumangalam ,Echoing ,Dinakaran ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்