×

கல்லணை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

திருக்காட்டுப்பள்ளி, டிச.27: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் காவல் சரகம் சின்ன காங்கேயன்பட்டி கல்லணை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சின்ன காங்கேயம்பட்டி கல்லணை கால்வாய் வடகரை மதகு அருகே தண்ணீரில் மூழ்கிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மிதப்பாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் கிராம நிர்வாக அலுவலருக்குதகவல் தெரிவித்தனர்.

இது குறித்து நந்தவனப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் விக்னேஸ்வரி பூதலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், வழக்கு பதிந்த பூதலூர் போலீஸார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : Kallanai canal ,Thirukattupalli ,Chinna Kangeyanpatti ,Puthalur police ,Thanjavur district ,
× RELATED மினி பஸ்சில் இறந்து கிடந்த மெக்கானிக்