- அங்கன்வாடி
- Jayankondam
- சட்டமன்ற உறுப்பினர்
- ஜெயங்கொண்டம் உடையார்பாளையம், அரியலூர் மாவட்டம்
- உடையார்பாளையம்-
ஜெயங்கொண்டம் டிச.27: ஜெயங்கொண்டம் அருகே ரூ.31.48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டுஅங்கன்வாடி மையங்களை எம்எல்ஏ திறந்து வைத்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உடையார்பாளையத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், உடையார்பாளையம் – ஜெயங்கொண்டம் மெயின் ரோட்டு தெருவில் ரூ.14.31 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம், உடையார்பாளையம் மேட்டுத் தெருவில் ரூ.17.17 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜேஸ்வரி, பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார், துணைத் தலைவர் அக்பர் அலி, ஜெயங்கொண்டம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தனசேகர், பேரூர் கழக செயலாளர் கோபாலகிருஷ்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், உடையார்பாளயம் பேரூர் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
