ராஜபாளையம், டிச.27: ராஜபாளையத்தில் திமுக வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராஜபாளையத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணமுருகன் தலைமை வகித்தார். எஸ்.திருவேங்கடபுரத்திற்கு பூத் நம்பர் 41 மற்றும் 42க்கு உட்பட்ட பகுதிக்கும் வாகைக்குளம்பட்டிக்கு உட்பட்ட பூத் நம்பர் 45 மற்றும் 46க்கு உட்பட்ட பகுதியிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி வேல்முருகன், முன்னாள் ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் ஆசைத்தம்பி, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் செல்வி, கிளைச்செயலாளர் ராமர், வாகைக்குளம் பட்டி பிஎல்ஏ-2 கிளை செயலாளர் ஆகாசம், தகவல் தொழில்நுட்ப களப்பணி அமைப்பாளர் முத்துக்குமார் மற்றும் கழக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
