×

கைரேகை பதிவுக்கு டிச.31 கடைசி நாள்

மதுரை, டிச. 27: தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் படி ஏஏஒய் மற்றும் பிஎச்எச் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகைப் பதிவினை மின்னணு முறையில் நூறு சதவீதம் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை கைரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் உறுப்பினர்கள் உடனடியாக, சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு சென்று, கைரேகையை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

மதுரை மாவட்டம் மற்றும் மாநிலத்திற்கு வெளியே பணியாற்றும் அட்டைதாரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், தற்காலிகமாக தற்போது வசிக்கும் மாவட்டம் அல்லது மாநிலத்தில் ஐஎம்பிடிஎஸ் மூலம் தங்களது கைரேகைப் பதிவினை மேற்கொள்ளலாம். இந்த பணிகளுக்கு டிச.31 கடைசி நாளாகும். இத்தகவலை மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

 

Tags : Madurai ,AAY ,BHH ,
× RELATED மினி பஸ்சில் இறந்து கிடந்த மெக்கானிக்