மதுரை, டிச. 27: அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் சரவணன் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள், மருத்துவத் தகுதியின்மையால் விடுவிக்கப்பட்டு ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்கு தங்கள் வாழ்நிலையை உறுதி செய்யும சான்றிதழ் வழங்க வேண்டும்.
இதற்காக ஜன. 2ம் தேதி முதல் மார்ச் 20ம் தேதிக்குள் அரசுப்போக்குவரத்துக்கழகத்தின் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்களை சேர்ந்தவர்கள் மதுரை, விருதுநகர் தலைமையகம், திண்டுக்கல், தேனி, ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை அலுவலகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் நேரில் ஆஜராகி ஒப்பமிட வேண்டும்.
மேலும், அரசு கட்டுப்பாட்டின் கீழ் அந்தந்த பகுதியில் உள்ள இ சேவை மையத்தில் டிஎன்எஸ் – 103 ஓய்வூதியதாரர் வாழ்க்கை சான்றிதழ் வரும் 1ம் தேதி முதல் மார்ச் 31க்குள் பதிவு செய்யலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
