×

நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை

தர்மபுரி, ஜன.22: தர்மபுரி மாவட்ட தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரதாபன் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் நெல் சாகுபடி செய்யதுள்ளனர்.
விவசாயிகள் தற்பொழுது இந்த நெல்லை அறுவடை செய்து வருகின்றனர். நெல் சாகுபடி செய்த சிறுகுறு விவசாயிகள், அதனை விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உடனடியாக தர்மபுரி மாவட்ட நிர்வாகம் ஒழுங்கு முறை விற்பனை நிலையம் அல்லது தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் மூலம், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Paddy Procurement Station ,
× RELATED கீழாம்பூர் நெல் ெகாள்முதல் நிலையத்தை...