×

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இவரை தமிழ்நாடு அல்லது மகாராஷ்டிரா மாநிலத்துக்கு மாற்றி விசை படகு தீப்பிடித்து எரிந்தது

கடலூர், டிச. 27: கடலூரில் பழுது நீக்கும் பணியின் போது விசை படகு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஞானசேகரன்(45). மீனவரான இவர் விசைப்படகு வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது படகு கடந்த ஒரு மாதமாக பழுதாகி இருந்தது. இதனால் தொழிலுக்கு செல்லாமல் படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று பழுது நீக்கும் பணிக்காக கடலூர் துறைமுகம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு, அங்கு படகு மெக்கானிக்குகள் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர். வெல்டிங் செய்த போது, அதிலிருந்து பறந்த தீப்பொறி படகில் பட்டு திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி, கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும், முடியாததால் போலீசார் மற்றும் கடலூர் சிப்காட் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீ பற்றி எரிந்த படகில் தண்ணீர் பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர். இருப்பினும், படகு கடுமையான சேதத்திற்கு உள்ளானது. சேத மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. விபத்து குறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விட்டு வேறு ஒருவரை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags : Tamil Nadu ,Maharashtra ,Cuddalore ,Rajendran ,Gnanasekaran ,Devanampattinam ,
× RELATED பைக் மீது கார் மோதி வாலிபர் படுகாயம்