×

நியாயவிலை கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க குழு அமைப்பு: தமிழக அரசு தகவல்

சென்னை: நியாயவிலை கடைகளில் பணியாற்று ஊழியர்களின் ஊதிய உயர்வு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யும் வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் உள்ள 36,954 ரேஷன்கடைகளில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றன. இவர்களது ஊதிய உயர்வு கோரிக்கை பரிசீலனை செய்வது மற்றும் அரசு தரப்பில் அவற்றை கொண்டு சேர்ப்பது தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வீரப்பன் தலைமையில் 10 பேர் கொண்ட கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், நிதி நிறுவனங்கள் துறை கூடுதல் இயக்குனர், கூட்டுறவு துறை துணை செயலர், மண்டல பதிவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கங்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கையை அடுத்து அரசு தரப்பில் இத்தகையை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாயவிலைக்கடை களில் பணியாற்றும் விற்பனையாளர்கள், கட்டுநர்கள் ஆகியோருக்கு புதிய ஊதிய விகிதங்கள் மற்றும் அகவிலைப்படி மருத்துவப்படி உள்ளிட்ட அனைத்து படிகள் வழங்குதல், தேர்வு நிலை, தேக்க நிலை ஊதிய உயர்வு வழங்குதல், ஊதிய உயர்வு வழங்குதல் போன்ற பரிந்துரையை இந்த குழு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பரிந்துரைக்கப்படும் ஊதிய விகிதத்தின்படி, திருத்தியமைக்கப்படும் ஊதியத்தில் முரண்பாடுகள் ஏதும் ஏற்படா வண்ணம் குழுவின் அறிக்கையினை தயார் செய்திடவும் குழு அளிக்கும் பரிந்துரையின் படி, கூட்டுறவு நிறுவனங்களுக்கு மற்றும் அரசுக்கு ஏற்படக்கூடிய கூடுதல் நிதி செலவீனத்தை கூட்டுறவு நிறுவனங்கள் ஏற்கும் திறன் ஆகியவற்றை பரிசீலித்து அறிக்கை தயாரித்து அளிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

Tags : Tamil ,Nadu ,government ,Chennai ,Tamil Nadu ,
× RELATED சென்னையில் தெருக்கள், சாலைகளை தரமாக...