×

பைக் விபத்தில் விஏஓ உதவியாளர் பலி

செய்யாறு, ஜன.21: செய்யாறு அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், விஏஓ உதவியாளர் பரிதாபமாக பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா, சோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அமரேசன்(54). கீழ்நெல்லி கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 16ம் தேதி இரவு அமரேசன் தனது பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

காஞ்சிபுரம்- செய்யாறு சாலையில் மாங்கால் கூட்ரோடு அருகே வந்தபோது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவரது பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அமரேசனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அமரேசன் நேற்று காலை இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : VAO ,assistant ,bike crash ,
× RELATED கூடுவாஞ்சேரியில் ஓய்வுபெற்ற விஏஓ வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளை