×

தோழகிரிப்பட்டி பகுதியில் பங்கேற்பு கிராம மதிப்பீடு திட்ட விழிப்புணர்வு

தஞ்சாவூர், டிச.25: தஞ்சாவூர் மாவட்டம் தோழகிரிப்பட்டி பகுதியில் வேளாண் கல்லூரி மாணவிகள் ‘பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு’ திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு மேற்கொண்டனர். பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு என்பது கிராமப்புற மக்களின் அறிவு அனுபவங்கள் மற்றும் தேவைகளை புரிந்து கொண்டு வளர்ச்சி திட்டமிடலில் அவர்களை ஈடுபடுத்தும் ஒரு முறையாகும்.

அதில் சமூக வரைபடம், நில வள வரைபடம், வெண் வரைபடம், தினசரி வேலைகள் வரைபடம், மொத்த மக்கள் தொகை விகிதம், பிரச்சனை மரம் வரைபடம், வரவு செலவு வரைபடம், மதிப்பீடு, போக்குவரத்து வரைபடம் உள்ளிட்ட பல்வேறு நுட்பங்களை வேளாண் கல்லூரி மாணவிகள் ஹாஜிரா, ஹேமாஸ்ரீ, இலக்கியா, இந்துஜா, கனிமொழி, கத்தீஜா, கிருபா ஸ்ரீ, கௌசல்யா, லோகேஸ்வரி, லட்சுமி பிரியா, லைலா, நிஷா, ஜெனி, நந்தினி ஆகியோர் அந்த பகுதி மக்களின் தேவையை அறிந்து, மக்களின் உதவியுடன் பங்கேற்பு கிராம மதிப்பீடு செய்தனர்.

 

Tags : Thozhakiripatti ,Thanjavur ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்