பனாஜி: கோவாவின் வடக்கு பகுதியில் உள்ள அர்போரா கிராமத்தில் பை ரோமியோ லேன் என்ற இரவு விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் கடந்த 6ம் தேதி நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விடுதி பணியாளர்கள் 20 மற்றும் சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் உடல் கருகி பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக விடுதி மேலாளர்கள் ராஜ்வீர் சிங்கானியா, பிரியான்சு தாக்கூர், விவேக் சிங் ஆகிய மூன்று பேரும் கடந்த 7ம் தேதி கைது செய்யப்பட்டனர். மேலும், தாய்லாந்து நாட்டில் தங்கி இருந்த விடுதி உரிமையாளர்கள் கவுரவ் லுத்ரா மற்றும் அவரது சகோதரர் சவுரப் லுத்ரா ஆகியோர் உள்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் விடுதி மேலாளர்கள் ராஜ்வீர் சிங்கானியா, பிரியான்சு தாக்கூர், விவேக் சிங் ஆகியோர் ஜாமீன் கோரி கோவா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை நேற்று விசாரித்த கோவா நீதிமன்றம், ராஜ்வீர் சிங்கானியா, பிரியான்சு தாக்கூர் ஆகியோருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியும், விவேக் சிங்கின் ஜாமீன் மனுவை நிராகரித்தும் உத்தரவிட்டது.
