- ஆந்திரப் பிரதேசம் அரசு
- ஆந்திரப் பிரதேசம்
- சுகாதார அமைச்சர்
- சத்தியகுமார் யாதவ்
- ஆந்திரப் பிரதேச சுகாதார அமைச்சகம்
அமராவதி: ஆந்திராவில் முறையாக பயிற்சி பெற்ற முதுகலை ஆயுர்வேத மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகளை சுதந்திரமாக செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் சுகாதார துறை அமைச்சகம் சார்பில்நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில்,‘‘அறுவை சிகிச்சையில் முறையாக பயிற்சி பெற்ற முதுகலை ஆயுர்வேத மருத்துவர்கள் சுதந்திரமாக அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகின்றது.
இந்திய மருத்துவ மத்திய கவுன்சில், 2020 மற்றும் இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க சுகாதாரத்துறை அமைச்சர் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் தகுதியுள்ள ஆயுர்தேவ மருத்துவர்கள் 39 சதவீத பொது அறுவை சிகிச்சைகளையும், 19 சதவீதம் காது, மூக்கு தொண்டை மற்றும் கண் மருத்துவ சிகிச்சைகளையும் செய்ய முடியும். பண்டைய இந்திய மருத்துவ முறையை நவீன மருத்துவ முறையுடன் ஒருங்கிணைக்கும் வகையில் அம்மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
