உறவினர்கள் திடீர் சாலை மறியல் அரிமளம் பகுதி விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன தொழில்நுட்பம் குறித்த கண்டுணர்வு பயணம்

திருமயம், ஜன.21: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் வட்டாரம் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் (2020-2021) நுண்ணீர் பாசனம் என்ற தலைப்பில் மாநிலத்திற்குள்ளான விவசாயிகள் கண்டுணர்வு பயணத்தை வட்டார தொழில் நுட்ப குழு அமைப்பாளர் வேளாண்மை உதவி இயக்குனர் காளிமுத்து தொடங்கி வைத்தார். இதனடிப்படையில் அரிமளம் வட்டார விவசாயிகள் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள ஜெயின் இரிகேசன் சிஸ்டம்ஸ் லிட் நிறுவனத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு நிறுவனத்தின் தரம் பரிசோதனை மேலாளர்கள் பாலகுமார், வேலுசாமி மற்றும் நீர் பரிசோதனை முறைகள் அவற்றின் முக்கியத்துவம், பாசனநீர் மேலாண்மை, சூரியசக்தியின் மூலம் நுண்ணீர் பாசனம் அமைப்பது, அவற்றின் மூலம் நீர் பாசனம் செய்தல், பாதுகாக்கப்பட்ட சூழலில் சொட்டுநீர் பாசனத்தின் மூலம் நாற்று உற்பத்தி செய்தல் மற்றும் பாசன கருவிகளின் தரங்கள் ஆகியவை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினர்.

அப்போது நிறுவனத்தின் வேளாண் விரிவாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் குமார் ஜெயின் இரிகேசன் நிறுவனம் குறித்தும், நுண்ணீர் பாசனம், அவற்றின் நன்மைகள், பயிர்களுக்கு தேவையான நுண்ணீர் பாசன அமைப்புகள், பயிருக்கு தேவையான சத்துக்கள், சொட்டுநீர் பாசனம், மழைத்தூவான், தெளிப்புநீர் பாசனம் அமைக்கும் முறைகள், சொட்டுநீர்ப் பாசனத்தில் அளிக்கப்படும் உரங்கள் அவற்றின் கரைதிறன், பயன்படுத்தும் உபகரணங்கள், கருவிகள் மற்றும் அவற்றின் பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். ஜெயின் இரிகேசன் நிறுவனத்தின் விற்பனை மேலாளர் தமிழ்செல்வன் நுண்ணீர் பாசன கருவிகள் தொடர்பான விற்பனை முறைகள், ஜெயின் இரிகேசன் நிறுவன புதிய தொழில் நுட்பங்கள் குறித்தும் எடுத்து கூறினார். விவசாயிகள் சொட்டுநீர், தெளிப்புநீர், மழைத்துவான் பாசன முறைகள் மற்றும் சூரியசக்தி மூலம் அமைக்கப்பட்டநீர் பாசன முறைகள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் லெட்சுமிபிரபா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சங்கீதா, முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: