கொரோனா காலத்தில் நான்கு மொழிகளை கற்ற பொன்னமராவதி மாணவி ஓவியம் வரைவதிலும் அசத்தல்

பொன்னமராவதி, ஜன.21: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நகரப்பட்டியை சேர்ந்த சேதுராமன்-மகேஸ்வரி தம்பதிக்கு நான்கு மகள்கள். சேதுராமன் தற்போது வெளிநாட்டில் உள்ளார். இவரது இரண்டாவது மகள் சுபபாரதி அதே பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ள இவர் பல்வேறு ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் பெற்றுள்ளார். கொரோனா காலத்தில் மாணவி சுபபாரதி தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்கு எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்த நிலையில் தாயார் உதவியுடன் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளை குறைந்த நாட்களில் எழுதவும், படிக்கவும் பேசவும் கற்று தற்போது ஆறு மொழிகளையும் சரளமாக பேசி பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளார். மேலும், பெயிண்டிங் டிராயிங், ரிவர்ஸ் ட்ராயிங் என கலக்கி வருகிறார். இவரது திறமையை ஊக்குவிக்க வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் நடைபெறும் பல்வேறு வகையான ஓவிய போட்டிக்கு தயாராகுவதற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: