×

ஜிப்மர் காலி பணியிடத்துக்கு இந்தி, ஆங்கிலத்தில் குறிப்பாணை

புதுச்சேரி, டிச. 24: காலி பணியிடம் நிரப்ப தமிழை தவிர்த்து இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் அலுவலக குறிப்பாணை அனுப்பிய ஜிப்மர் நிர்வாகத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜிப்மர் மூத்த நிர்வாக அதிகாரி ஹவா சிங் இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் அனுப்பிய அலுவலக குறிப்பாணையில், காரைக்காலில் ஜிப்மர் புதுச்சேரி ஜிப்மரின் 2வது வளாகமாகும். நிதி அமைச்சக செலவினத்துறையில் வளாகத்துக்கு நிர்வாக செயல்பாடுகள் உருவாக்கப்பட்டன. மூத்த நிர்வாக அதிகாரி, நிர்வாக அதிகாரி, கணக்கு அதிகாரி, உதவி கணக்கு அலுவலர், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் ஆபீசர், உதவி நிர்வாக அதிகாரி இருவர், இளநிலை நிர்வாக அதிகாரி 4 பேர் தற்போதைய ஆட்சேர்ப்பு விதிப்படி இப்பதவிகள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும். இப்போது காரைக்கால் வளாகத்தில் தகுதியான பணியாளர்கள் இல்லை. இதனால் இப்பதவிகள் காலியாகவே உள்ளன. இந்த காலியிடங்களை டெபுடேஷன் அடிப்படையில் இடமாற்றம் மூலம் நிரப்ப புதுச்சேரி ஜிப்மரின் தகுதியான நிர்வாக மற்றும் கணக்குப்பிரிவு அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம். டெபுடேஷன் 3 ஆண்டுகளுக்கு அல்லது பதவி உயர்வு மூலம் காலிப்பணியிடம் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளது. இந்த குறிப்பாணையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு உள்ளதால் இளைஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. வழக்கமாக ஆங்கிலத்தில் மட்டுமே வெளியான இதுபோன்ற அறிவிப்புகள் தற்போது கூடுதலாக இந்தியிலும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : JIPMER ,Puducherry ,Hawa Singh… ,
× RELATED ரூ.10 ஆயிரம் கோடிக்கு போலி மருந்தில்...