- முன்னாள்
- எம்.பி. ஞானதிரவியம்
- கிறிஸ்துமஸ் விழா
- ஆவரிகுளம்
- பனக்குடி
- நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர்
- ஞானதிரவியம்
- கலைஞர் நகர்
- கிறிஸ்துமஸ்
- புதிய ஆண்டு
பணகுடி, டிச. 24: ஆவரைகளத்தில் கிறிஸ்துமஸ் விழா முன்னாள் எம்பி ஞானதிரவியம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். ஆவரைகுளம் ஊராட்சி கலைஞர் நகர் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா முன்னிட்டு முன்னாள் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் அவரது குடும்பத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பண்ணை குழும நிறுவனர் சுதேச ஹேமலதா, ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா அருள், ஆவரைகுளம் திமுக கிளைச் செயலாளர் இளங்கோ கலைசிகாமணி, செட்டிகுளம் பெர்சியால் விஜயன், ஆசிரியர் அப்பாவு, திமுக நிர்வாகிகள் ஜெகன், கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
