×

கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஈரானின் பயங்கரவாதமே காரணம்: அதிபர் டிரம்ப் பகிரங்கக் குற்றச்சாட்டு!

வாஷிங்டன்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதற்கு ஈரானின் “வெறித்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களே” காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்: ஈரான் அண்டை நாடுகள் மீதும், சர்வதேச வணிகக் கப்பல்கள் மீதும் நடத்தி வரும் தாக்குதல்களால் உலகப் பொருளாதாரம் சீர்குலைந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஈரானின் தன்னிச்சையான போர்க்குணமே முழு முதற்காரணம் என கூறினார். உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் சட்டவிரோதமாக முடக்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இதனால் உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலி உடைந்துள்ளதாகவும், இது பல நாடுகளைப் பாதிப்பதாகவும் தெரிவித்தார்.

எரிபொருள் தட்டுப்பாட்டால் தவிக்கும் நாடுகள், கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஹார்முஸ் நீரிணையை ஈரானிடமிருந்து மீட்டுக்கொள்ளுங்கள். இல்லையெனில், அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குங்கள். எங்களிடம் அபரிமிதமான எரிசக்தி இருப்பு உள்ளது என அவர் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

Tags : Iran ,President Trump ,Washington ,US ,President Donald Trump ,White House ,Trump ,
× RELATED ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆட்சியைக்...