×

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,400 குறைந்தது!

 

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,400 குறைந்தது. சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச்சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஈரான் அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. தங்கம் விலை வாரத்தின் தொடக்க நாளான திங்கள் கிளமை காலையில் தங்கம் விலை சற்று குறைந்தது.

அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13.600க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.1,08,800க்கும் விற்பனையானது. மாலையில் தங்கம் விலை திடீரென உயர்ந்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,770க்கும், பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 160க்கும் விற்பனையானது. இந்நிலையில் நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.380 உயர்ந்து , ஒரு கிராம் ரூ.14,050க்கும், பவுனுக்கு ரூ.3040 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12,400க்கும் விற்பனையானது. இதே போல நேற்று வெள்ளி விலையும் உயர்ந்தது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.265க்கு, கிலோவுக்கு ரூ.15,000 உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2.65 லட்சத்துக்கும் விற்பனையானது. இதனையடுத்து இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராம் ரூ.10 குறைந்து ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,400 குறைந்தது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.800 குறைந்திருந்த நிலையில், தற்போது ரூ.1,600 குறைந்து ரூ.1,10,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ஒரே நாளில் ரூ.300 குறைந்து ஒரு கிராம் ரூ.13,750க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags : Chennai ,
× RELATED ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை...