×

தமிழர்களின் நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமையும்; தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடரும்: கனிமொழி எம்.பி

 

சிவங்ககை: “பழந்தமிழ் நாகரிகத்தின் பெருமையை பறைசாற்றும் கீழடியிலிருந்து எனது தேர்தல் பரப்புரையை தொடங்குகிறேன் என கனிமொழி, எம்.பி. தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். சிவங்ககை மாவட்டம் மானாமதுரை தேவர் சிலையில் அருகே மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்து, கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார். அப்பொழுது தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்து பேசிய கனிமொழி எம்.பி. கூறியதாவது; நம்முடைய முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுத்து, உங்கள் கைகளில் இரண்டாவது முறையாக மானாமதுரை தொகுதியில் வெற்றி வேட்பாளராக தமிழரசியை ஒப்படைத்துள்ளார்.

நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து, இந்த பகுதியில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய ஒரு வேட்பாளர். எந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டாலும் என்னுடைய தொகுதிக்கு வேண்டும் என்று வலியுறுத்தி பெற்றுத் வந்து, அதை நிறைவேற்றித் தரக்கூடிய ஒருவர் தான் தமிழரசி. மிகச் சிறப்பாக மகளிர் அணியில் பணியாற்றும் ஒரு சகோதரி. அதே நேரத்தில், தேர்தல் அறிக்கை குழுவில் அவருடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக, அவரை உறுப்பினராக முதலமைச்சர் நியமித்தார். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போதும் கூட, ‘மானாமதுரைக்கு இது வேண்டும், அது வேண்டும்’ என்று முதலில் தனது தொகுதியைப் பற்றிய அக்கறையுடன் போராடி, பின்னர் தமிழ்நாட்டைப் பற்றி சிந்திக்கும் அளவுக்கான ஒரு சட்டமன்ற உறுப்பினரை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.

அப்படிப்பட்ட நம்முடைய தமிழரசியுக்கு, தமிழ்நாடு வியந்து பார்க்கக்கூடிய அளவிற்கு ஒரு மிகச் சிறப்பான வெற்றியை நீங்கள் உருவாக்கி காட்டுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதைத்தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில் தெரிவித்ததாவது; பழந்தமிழ் நாகரிகத்தின் பெருமையைப் பறைசாற்றும் கீழடியிலிருந்து, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான எனது பரப்புரையைத் தொடங்குகிறேன். கீழடிக்கும் நாக்பூருக்கும் இடையிலான போராக நடைபெறும் இந்தத் தேர்தலில் தி.மு.கழகம் மகத்தான வெற்றியைப் பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும்; தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ந்து காக்கும். தமிழர்களின் நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமையும். தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடரும். தமிழினத்தின் பெருமைமிகு கீழடி வரலாற்றை மறைக்கப் பார்க்கும் பாஜகவையும், அதற்கு துணைபோகும் அதிமுகவையும் மீண்டும் நிராகரிக்க மானாமதுரை மக்கள் தயாராகி விட்டார்கள். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

 

Tags : Tamils ,Tamil Nadu ,Kanimozhi M. B. Sivangakai ,Shivangakai ,District ,Dimuka ,Manamadurai ,Assembly Constituency ,Manamadurai Devar Statue ,
× RELATED ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆட்சியைக்...