×

கிருஷ்ணராயபுரம் பகுதியில் மது விற்ற 2பேர் கைது: மாவட்ட கலெக்டர் தகவல்

கிருஷ்ணராயபுரம், டிச.22: மாயனூர் காவல் நிலைய சரகத்தில் சட்ட விரோதமாக பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவல் பெயரில் சோதனை மேற்கொண்டதில் மேலடை பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவரிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரையும் மாயனூர் போலீசார் கைது செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.

அதேபோல் கிருஷ்ணராயபுரம் அருகே முடக்குசாலை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட மணவாசி பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவரிடமிருந்து (27) மது பாட்டில்களை பறிமுதல் செய்த மாயனூர் போலீசார் அவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Krishnarayapuram ,Mayanur police station ,Karur district ,
× RELATED கரூர் மாவட்டத்தில் டிராகன் பழம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம்