- Kurumalai
- குஜிபட்டி
- உடுமலை
- அமராவதி
- அனைமலை புலி இருப்பு
- மேல் குருமலை
- மாவடப்பு
- தளிஞ்சி
- தளிஞ்சி வயல்
- அட்டுமாலி
- கோடந்தூர்
- லைலைசார்
உடுமலை : உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள குருமலை,மேல் குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, தளிஞ்சி, தளிஞ்சு வயல், ஆட்டுமலை, கோடந்தூர், பொறுப்பாறு உள்ளிட்ட குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள்.வனப்பகுதியில் உள்ள ஒரு சில குடியிருப்புகளுக்கு மட்டுமே பாதை வசதி உள்ளது.அதுவும் மண் பாதையாகும்.
இந்தப் பாதையானது மழைக் காலங்களில் சேதமடைவது வாடிக்கையாக உள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் அதை பயன்படுத்த இயலாத சூழல் ஏற்பட்டு விடுகிறது.அந்த வகையில் உடுமலை வன சரகத்திற்கு உட்பட்ட குருமலை குழிப்பட்டிக்கு செல்லும் மண் பாதை சேதமடைந்தது. இதனால் மலைவாழ் மக்கள் அதை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, மலைவாழ் மக்கள் ஒன்றிணைந்து பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுபோன்ற மழைக்காலங்களில் பாதை சேதம் அடைந்தால் அதை வனத்துறையினர் உரிய முறையில் சீரமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

