- சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை
- சென்னை
- மதுரை
- அரவிந்தன்
- மடப்பாளையம்
- அம்பாசமுத்திரம்
- திருநெல்வேலி மாவட்டம்
விக்கிரவாண்டி: சென்னையிலிருந்து மதுரைக்கு தனியார் ஆம்னி பஸ் நேற்று முன்தினம் நள்ளிரவு 40 பயணிகளுடன் புறப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மடப்பாளையத்தை சேர்ந்த அரவிந்தன் (35) என்பவர் ஓட்டி சென்றார். நேற்று அதிகாலை 4 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டி அடுத்த சங்கராபரணி ஆற்றுப்பாலத்தில் பஸ் வரும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி அருகிலிருந்த பாலதடுப்பு சுவரில் மோதி இரு பாலங்களுக்கிடையே அந்தரத்தில் தொங்கியது. இதனால் பஸ்சில் தூக்கத்திலிருந்த பயணிகள் அலறினர். அப்போது சாலையில் சென்ற லாரி டிரைவர்கள், வாகன ஓட்டிகள் பஸ்சில் இருந்த பயணிகளை அவசர கால வழியாக பத்திரமாக மீட்டனர். விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 40 பயணிகளில் 23 பேர் காயம் அடைந்தனர். அனைவரும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
