×

ரூ.10 கோடி கஞ்சா ஆயில் பறிமுதல்

ராமேஸ்வரம்: இந்திய கடலோர காவல் படையுடன் இணைந்து சுங்கத்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று மன்னார் வளைகுடா கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாம்பன் முதல் முனைக்கு நேராக, கடலில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டுப்படகை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் ரூ.10 கோடி மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா ஆயில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அதனைக் கைப்பற்றி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நாட்டுப்படகை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து மண்டபம் கடலோர காவல்படை முகாமில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Rameswaram ,Customs Intelligence Unit ,Indian Coast Guard ,Gulf of Mannar ,Pamban ,
× RELATED ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் சோகம் ஒரே...