- ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்
- திருச்சி
- தஞ்சாவூர்
- ஸ்ரீரங்கம்
- யாத்ரி
- நிவாஸ்
- ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்
- யாத்ரி நிவாஸ்
- பஞ்சகரை
திருச்சி: ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் தஞ்சாவூரை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோயிலுக்கு சொந்தமாக பஞ்சகரை பகுதியில் யாத்ரி நிவாஸ் என்ற பெயரில் விடுதி உள்ளது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு டிச.30ம் தேதி நடக்கிறது. இதனால் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தில்லை ஸ்தானம் பகுதியை சேர்ந்த சுவாமிநாதன்(67). இவரது மனைவி செண்பகவள்ளி(65). இவர்களது மகள்கள் பவானி(47), ஜீவா(32) ஆகியோர் யாத்ரி நிவாஸில் 710வது அறையில் தங்கி இருந்தனர்.
முதலில் கடந்த 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை மட்டுமே தங்க முன்பதிவு செய்திருந்தனர். கடந்த 14ம் தேதி மேலும் 3 நாட்கள் அனுமதி வாங்கி தங்கி இருந்ததாக தெரிகிறது. கடந்த 16ம் தேதி அறையை காலி செய்ய வேண்டும். அவர்கள் அறையை காலி செய்யவில்லை. இந்நிலையில் நேற்று பிற்பகல் 12 மணியளவில் அந்த அறைக்கு விடுதி பராமரிப்பாளர்கள் சென்றனர். அப்போது உள்பக்கமாக கதவு தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. அந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அவர்கள், கதவு பூட்டை உடைத்து சென்று பார்த்தபோது அங்கு 4 பேரும் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
தகவலறிந்து ஸ்ரீரங்கம் போலீசார் வந்து விசாரித்தனர். அதில், பவானி மற்றும் ஜீவா ஆகியோர் மனவளர்ச்சி குன்றியவர்கள் என்றும், வயது மூப்பு காரணமாக மன வளர்ச்சி குன்றிய 2 மகள்களை பெற்றோரால் சரிவர கவனிக்க முடியாததால் தம்பதியினர் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளனர். இதில் ஏற்பட்ட விரக்தியால் மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு பெற்றோரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதும், 4 நாட்களுக்கு முன்பே தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிய வந்தது.
தம்பதியர் எழுதி வைத்திருந்த கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில், எங்களுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. நாங்கள் இறந்த பிறகு, எங்களின் உடல்களை ஒரே இடத்தில் சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இதுபற்றி போலீசார் கூறுகையில்,‘‘ மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து 3 மாதத்தில் கணவரை பிரிந்து வீட்டிற்கு வந்து விட்டதாக தெரிகிறது. கடந்த 25 ஆண்டுகளாக கடன் வாங்கி பிள்ளைகளுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளனர். ஆனாலும், இரண்டு மகள்களும் பூரண குணம் அடையவில்லை. அளவுக்கு அதிகமாக வாங்கிய கடனை கட்ட முடியாமல் வேறுவழியின்றி தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது’’ என்றனர்.
