×

திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

திருப்பூர்: திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் நேற்று மாலை முதலே தொடர்ந்து மழை பெய்து வந்துள்ளது. மழையின் எதிரொலியாக இன்று காலை ஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு வெள்ளநீரானது மலையின் அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் ஆலயத்தை சூழ்ந்து கொண்டது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஒரு வாரகாலமாக பக்தர்கள் அங்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் மீண்டும் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்லவும், கோவிலுக்கு செல்லவும் கோயில் நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெல்ல நீரானது கோவில் முழுவதும் சூழ்ந்து கொண்டு கரைபுரண்டு ஓடுகிறது. எனவே பாதுகாப்பு கருதி கோயில் நிர்வாகத்தினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Panchalinga Falls ,Thirumoorthy Hills ,Tiruppur ,Udumalaipettai ,Tiruppur district ,
× RELATED கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர்...