×

மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி அரங்கம் கட்டிட கட்டுமானப்பணி

அரியலூர்,டிச.17: அரியலூர் மாவட்டம் மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி அரங்கம்கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமிநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் கிராமத்தில் மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி அரங்கம் கட்டடம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி நேற்று 16ம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் சுதந்திரப் போரட்ட வீரர்கள், தியாகிகள் மற்றும் மொழிப்போர் தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு அதனை செயல்படுத்தி வருகிறார்கள்.

அதன்படி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானிய கோரிக்கையின் போது செய்தித் துறை அமைச்சர் தமிழ்மொழி மீது தீராத பற்றுக்கொண்டு இந்தி திணிப்பினை எதிர்த்து போராடி முதன் முதலில் உயிர் தியாகம் செய்த கீழப்பழுவூர் சின்னசாமிக்கு அரியலூர் மாவட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்தார். அதனைத்தொடர்ந்து போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அரங்கம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது கட்டடத்தின் மேற்கூரைகள் அமைத்தல், மேடை அமைத்தல், நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்தல், வண்ணப்பூச்சு பணிகள், கதவுகள், மின் இணைப்புகள் ஏற்படுத்துல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி அரங்க வளாகத்தின் நுழைவு பாதை அமைத்தல் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் நேற்று நேரில் பார்வையிட்டு இதுவரை முடிக்கப்பட்டுள்ள பணிகளின் விவரம் குறித்து கேட்டறிந்து, பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், எஞ்சியுள்ள பணிகளின் விவரம் குறித்து கேட்டறிந்து பணிகளை துரிதபடுத்தி, உரிய காலத்திற்குள் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் போ.சுருளிபிரபு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சீ.ராம், உதவி செயற்பொறியாளர் பாபு, அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Martyr ,Kallappuvuur Chinnasamy Stadium ,Ariyalur ,District Language Martyrs ,Ratnasamishad ,Kalappupuvuur Sinnasamy Stadium ,Ariyalur district ,Talappuvuur village ,
× RELATED இண்டிகோ நிறுவனம் ஏர்பஸ் ஜெட் சேவையை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும்