×

ரூ.39.20 கோடியில் ஹஜ் இல்லம் அடிக்கல்; முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாகூர் தர்கா ஆதீனம் புகழாரம்: ‘கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார்’

நாகப்பட்டினம்: ரூ.39.20 கோடியில் ஹஜ் புனித பயணிகள் தங்குவதற்கு ஏற்ப ஹஜ் இல்லம் கட்ட அடிக்கல் நாட்டி இருப்பது முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார் என நாகூர் தர்கா ஆதினம் புகழாரம் சூட்டியுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலரும், பரம்பரை ஆதீனமாகிய செய்யது முகமது கலிபா சாகிப் கூறுகையில்,
‘ஆண்டு தோறும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் இஸ்லாமியர்கள், ஹஜ் பயணம் செல்வதற்கு ஒரு நாள் முன்னதாக சென்னை வந்து தங்கி விமானத்தில் ஹஜ் பயணம் செல்ல வேண்டும். இந்த புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய மக்களுக்கு உதவும் வகையில் விமான நிலையம் அருகில் தமிழ்நாடு அரசு சார்பில் ஹஜ் இல்லம் கட்டப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை பன்னாட்டு விமான நிலையம் அருகில் நங்கநல்லூரில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.39கோடியே 20 லட்சம் மதிப்பில் ஹஜ் புனித பயணிகள் தங்குவதற்கு ஏற்ப ஹஜ் இல்லம் கட்டுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நேற்று) அடிக்கல் நாட்டி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. முதல்வர் தனது வாக்குறுதி படி, இந்த திட்டத்தை நிறைவேற்றி தந்துள்ளார். இதனை ஒவ்வொரு இஸ்லாமியரும் மனமாற வரவேற்கின்றனர்’ என்றார்.

Tags : Hajj ,Nagaur Dargah Aadeenam ,Chief Minister ,M.K. Stalin ,Nagapattinam ,Haj ,Nagur Dargah Parampara Trustee ,
× RELATED வடமாநிலங்களில் கடும் பனி மூட்டம்...