×

டபிள்யுடிஏ டூர் டென்னிஸ் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக சபலென்கா தேர்வு: பேக் டு பேக் விருது பெற்று அசத்தல்

லண்டன்: டபிள்யுடிஏ டூர் டென்னிஸ், சிறந்த வீராங்கனை விருதை பெலாரஸ் வீராங்கனை அரீனா சபலென்கா, தொடர்ந்து 2வது ஆண்டாக வென்று சாதனை படைத்துள்ளார். பெலாரஸ் நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை அரீனா சபலென்கா, டபிள்யுடிஏ தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர், நடப்பாண்டில், யுஎஸ் ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார். தவிர, மேலும் இரு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இறுதிச் சுற்று வரை முன்னேறி அசத்தினார். இந்நிலையில், டபிள்யுடிஏ டூர் போட்டிகளில், இந்தாண்டின் சிறந்த வீராங்கனையாக சபலென்கா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடப்பாண்டில் நடந்த போட்டிகளின் அடிப்படையில் நடந்த வாக்கெடுப்பில், 80 சதவீத வாக்குகளை பெற்றதை அடுத்து, சிறந்த வீராங்கனையாக சபலென்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டும், அவரே இந்த விருதை பெற்று அசத்தி இருந்தார். இதற்கு முன், செரீனா வில்லியம்ஸ், இகா ஸ்வியடெக் ஆகிய இருவர் மட்டுமே, தொடர்ச்சியாக இரு ஆண்டுகள், இந்த விருதை பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Sabalenka ,London ,Aryna Sabalenka ,
× RELATED 4வது டி20 கிரிக்கெட்: இந்தியா-தெ.ஆப்ரிக்கா மோதல்