ஏர்வாடி, டிச. 17: ஏர்வாடி அருகே பனை மரத்தில் பைக் மோதியதில் சென்ட்ரிங் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். ஏர்வாடி அருகே உள்ள ஆலங்குளம் காமராஜர் தெருவைச் சேர்ந்த முருகவேல் மகன் அரவிந்த் ராஜ் (29), திருமணமாகவில்லை. சென்ட்ரிங் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு டிபன் வாங்குவதற்கு ஏர்வாடிக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். உப்பாற்று ஓடை அருகே வரும் போது பைக் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த பனை மரத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அரவிந்த்ராஜ் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு ஏர்வாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அரவிந்தராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த ஏர்வாடி இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார், அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
