- திமுக மாவட்ட செயற்குழு
- வள்ளியூரில்
- திமுக
- ஜனாதிபதி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- கிறிஸ்துமஸ் விழா
- பொருநை அருங்காட்சியகம்
- நெல்லை மாவட்டம்
- திமுக…
வள்ளியூர், டிச.17: திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் வரும் 20, 21ம் தேதிகளில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்து அரசு நல திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவருக்கு வரவேற்பு அளிப்பது சம்பந்தமாக நெல்லை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் கிரகாம்பெல் தலைமையில் மாவட்ட திமுக அலுவலகம் வள்ளியூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஞானதிரவியம், முன்னாள் அமைச்சர் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் என். சுரேஷ் ராஜன்,ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் சிவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.கே சித்திக், பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவ ஐயப்பன், சாந்தி சுபாஷ், ஒன்றிய செயலாளர்கள் ஜோசப் பெல்சி,வி.எஸ்.ஆர் .ஜெகதீஷ், வேலங்குளம் கண்ணன், போர்வெல் கணேசன், பி.சி ராஜன், செல்வ கருணாநிதி, சுடலைக்கண்ணு, ஆரோக்கிய எட்வின், சேவியர் செல்வராஜா, எரிக் ஜூட் பாண்டியன், சுபாஷ் தங்க பாண்டியன், அலெக்ஸ் அப்பாவு, நகர செயலாளர் மணி சூரியன், பேரூர் கழக செயலாளர்கள் சேதுராமலிங்கம், தமிழ்வாணன், முருகையா, வானுவாமலை, அயூப்கான், கசமுத்து, மாவட்ட சார்பணி அமைப்பாளர்கள் மல்லிகா அருள், பிரேமா, ஜான் ரபீந்தர், மாடசாமி, எஸ்.என். முருகன் பொட்டை குளம் முருகன், கேசவன், திருப்பதி ஜெயசீலன், சகாய பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
