திருவில்லிபுத்தூரில் காப்பு அலங்காரத்தில் காட்சி தந்த பெருமாள்

திருவில்லிபுத்தூர், ஜன. 19:  ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் சன்னதியில் உலக நன்மைக்காக மா காப்பு மற்றும் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். நேற்றும், நேற்று முன்தினமும் சீனிவாச பெருமாளுக்கு மா காப்பு, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 50 கிலோ அரிசி மாவு கொண்டு சீனிவாச பெருமாள் அலங்கரிக்கப்பட்டு பின்னர் மா காப்பு அலங்காரத்திலும், 50 கிலோ சந்தனத்தால் சீனிவாசப் பெருமாளுக்கு அணிவிக்கப் பட்டு பின்னர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதுகுறித்து அர்ச்சகர் ஒருவர் கூறுகையில், உலக நன்மைக்காகவும், வறட்சி நீங்கி வளம் பெறவும் மா காப்பு, சந்தனக்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த பக்தர்கள், சமூக இடைவெளியோடு பெருமாளை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் செய்திருந்தனர்.

Related Stories: